search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூலனூர்-தாராபுரத்தில் ரூ.15 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
    X

    புதிய சாலைகள் அமைக்கும் பணியினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்த போது எடுத்த படம். அருகில் கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் உள்பட பலர் உள்ளனர்.

    மூலனூர்-தாராபுரத்தில் ரூ.15 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

    • முடிவுற்ற பணிகளை திறந்தும் வைத்தனர்.
    • 12 சாலை பணிகளை தொடங்கி வைத்தனர்.

    தாராபுரம்:

    மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மூலனூர் மற்றும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.15.11 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார்.

    மூலனூர் ஊராட்சி ஒன்றியம் குமாரபாளையம் ஊராட்சி வடுகபட்டியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்து, முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் வண்ணாபட்டி முதல் சம்மங்கரை வரை சாலை அமைக்கும் பணி மற்றும் வேளாம்பூண்டி ஊராட்சி, அரிக்காரன்வலசில் ரூ.24.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, எரிசனம்பாளையம் பகுதியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் எரிசினம்பாளையம் முதல் மேட்டூர் வரை சாலை அமைக்கும் பணி மற்றும் ரூ.76.34 லட்சம் மதிப்பீட்டில் தட்டாரவலசு முதல் நாரணாவலசு வரை சாலை அமைக்கும் பணி உள்பட மொத்தம் ரூ.6.90 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்தும் வைத்தனர்.

    மேலும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சி தொப்பம்பட்டியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.8.21 கோடி மதிப்பீட்டில் 12 சாலை பணிகளை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சியின் திட்ட இயக்குநர் லட்சுமணன், திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஜெகதீஸ்குமார், திருப்பூர்மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மூலனூர் பேரூராட்சித்தலைவர் தண்டபாணி, மூலனூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சுமதி கார்த்திகுமார், வட்டார மருத்துவ அலுவலர் பாலமணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×