என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுப்பர்பாளையம்புதூரில் தேசிய தொழிலாளர் தின விழா பேரணி 17-ந்தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்

    அனுப்பர்பாளையம்புதூரில் தேசிய தொழிலாளர் தின விழா பேரணி 17-ந்தேதி நடக்கிறது

    • பாரதிய மஸ்தூர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது
    • செயல்தலைவர் செந்தில் முன்னிலை வகித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பிரபு தலைமை வகித்தார். செயல்தலைவர் செந்தில் முன்னிலை வகித்தார்.

    வருகிற 17-ந்தேதி திருப்பூர் - அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம் புதூரில் உள்ள கருப்பராயன் கோவில் அருகிலிருந்து, விஸ்வகர்மா ஜெயந்தி - தேசிய தொழிலாளர் தின விழா பேரணி நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு 15 வேலம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பொதுக்கூட்டம் நடைபெறும். இதில் 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க வேண்டும். பொதுக்கூட்டம் குறித்து தெருமுனை பிரசாரம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×