search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் ஆதிதிராவிட மாணவர்கள் தங்கும் விடுதி - அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
    X

    அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இணைந்து விடுதியை திறந்து வைத்த காட்சி.

    உடுமலையில் ஆதிதிராவிட மாணவர்கள் தங்கும் விடுதி - அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

    • அரசு தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் விடுதி கட்டப்பட்டது.
    • விடுதியை பார்வையிட்ட அமைச்சர்கள் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

    உடுமலை,

    உடுமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருகின்ற ஆதி திராவிட மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் விடுதி கட்டப்பட்டது. இந்த விடுதியை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இணைந்து விடுதியை திறந்து வைத்தனர்.

    அதைத் தொடர்ந்து விடுதியை பார்வையிட்ட அமைச்சர்கள் அங்கு மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

    இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக., அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவரும் மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன், உடுமலை நகர செயலாளர் சி.வேலுச்சாமி,உடுமலை ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன்,ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், எஸ்.கே.எம் தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார்,மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் முருகன், மடத்துக்குளம் ஒன்றிய குழு துணைத்தலைவர் ஈஸ்வர சாமி, உடுமலை ஆர்.டி.ஓ., ஜஸ்வந்த் கண்ணன்,தாசில்தார் கண்ணாமணி, தொழிற் பயிற்சி மைய முதல்வர் ராஜேஸ்வரி, பயிற்சி அலுவலர் ரமேஷ்குமார் உடன் இருந்தனர்.

    Next Story
    ×