என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டுக்கொட்டகை அமைக்க விருப்பமா? பொதுமக்களுக்கு போடிப்பட்டி ஊராட்சி அழைப்பு
    X

    கோப்புபடம்

    ஆட்டுக்கொட்டகை அமைக்க விருப்பமா? பொதுமக்களுக்கு போடிப்பட்டி ஊராட்சி அழைப்பு

    • ஊராட்சி மன்ற அலுவலத்திற்கு நேரில் சென்று தகுதி நிலை அறிந்து விண்ணப்பிக்கலாம்
    • வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பொது மக்களுக்கு இலவசமாக பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    உடுமலை:

    உடுமலையைஅடுத்த போடிப்பட்டி ஊராட்சியில் 2023 - 24 ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பொது மக்களுக்கு இலவசமாக பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    அதன்படி 5 ஏக்கருக்கு உட்பட்ட விவசாய நிலங்களில் இலவச கிணறு அமைக்கும் பணி மேற்கொள்ளுதல், தனிநபர் இல்லங்களில் வரப்பு மற்றும் வட்டப்பாத்தி அமைத்தல், தரிசு நிலங்கள் மேம்பாடு செய்தல் மற்றும் சமன் செய்தல், மாடு மற்றும் ஆட்டு கொட்டகை அமைத்தல், கோழிப் பண்ணைகள் அமைத்து தருதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது.

    இந்த திட்டத்தில் மூலம் பயனடைய விரும்பும் பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலத்திற்கு நேரில் சென்று தகுதி நிலை அறிந்து விண்ணப்பிக்கலாம் என்று ஊராட்சி மன்ற நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    Next Story
    ×