என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி திட்டத்தை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்த காட்சி.
வடுகபட்டியில் துணை மின்நிலையம் திறப்பு
- ரூ.190 கோடி மதிப்பீட்டில் 110 ஏக்கரில் நிறுவப்பட்டுள்ளது.
- 25 மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
தாராபுரம் :
தாராபுரம் வட்டம் குமாரபாளையம் ஊராட்சி வடுகபட்டியில்ரூ.190 கோடி மதிப்பீட்டில் 110 ஏக்கரில் நிறுவப்பட்டுள்ள தனியார் துறை துணை மின் நிலையம் மற்றும் 25 மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி திட்டத்தை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோவை மண்டல மின்சார வாரிய முதன்மைபொறியாளர் வினோதன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர்இல.பத்மநாபன், இந்திய காற்றாலை மின் உற்பத்தி உரிமையாளர்கள்சங்க தலைவர் கஸ்தூரிரங்கன் உள்ளிட்ட ஏராளமான தொழில்முனைவோர் பங்கேற்றனர்.
Next Story






