என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  12 மணி நேரம் வேலை சட்டத்தை அமல்படுத்த மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் - பியோ அமைப்பு வலியுறுத்தல்
  X

  கோப்புபடம்.

  12 மணி நேரம் வேலை சட்டத்தை அமல்படுத்த மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் - பியோ அமைப்பு வலியுறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தொழிலாளர்களுக்கு அதிக உற்பத்தி திறன் மற்றும் மேம்பட்ட வாழ்க்கை முறை உட்பட ஏராளமான பலன்களை தரும் என கூறுகிறது.
  • கணிக்க முடியாத மாறிவரும் சந்தை சூழலை எதிர்கொள்வதுடன் வாழ்வாதாரத்தையும் குறிப்பிட்ட அளவுக்கு கடினமாக்குகிறது.

  திருப்பூர் :

  தமிழககத்தில் 12 மணி நேரம் வேலை சட்டம் மசோதவை அமல்படுத்த மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என பியோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.பியோ எனும் இந்திய ஏற்றுமதியாளர்களின் கூட்டமைப்பின் தலைவர் சக்திவேல், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- தொழிலாளர்கள் கூடுதல் வருமானம் ஈட்டவும், உற்பத்தியாளர்களுக்கு அவர்களின் உற்பத்தி திறனை உலகளாவிய மதிப்பு சங்கிலியுடன் இணைந்து செல்ல நெகிழ்வான வேலை நேரங்களை சட்ட திருத்தமாக கொண்டு வர வேண்டும் என்ற தங்களின் துணிச்சலான முன்முயற்சியை தொழிலாளர்களும், தொழில்துறையினரும் வரவேற்றுள்ளனர்.

  சிறப்பான முதலீட்டு தேர்வு மாநிலமாக தமிழகம் மாறும் என அனைத்து துறைகளும் தங்கள் முயற்சியை வரவேற்று வருகின்றன. பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு 12 மணி நேர வேலை சட்டதிருத்த மசோதவை நிறுத்தி வைப்பதாக வந்த செய்தியறிந்து வருந்துகிறோம்.இது சம்பந்தமாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையை, உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

  நெகிழ்வான வேலை நேர ஏற்பாடுகளினால், பொருளாதாரம், வணிகங்கள், தொழிலாளர்களுக்கு அதிக உற்பத்தி திறன் மற்றும் மேம்பட்ட வாழ்க்கை முறை உட்பட ஏராளமான பலன்களை தரும் என கூறுகிறது.இது தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு சமமான வெற்றி என்ற சூழ்நிலையை வழங்குமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.உலகளாவிய வர்த்தக சூழலில் வியத்தகு தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் ஏற்றுமதி நிறுவனங்கள், கணிக்க முடியாத மாறிவரும் சந்தை சூழலை எதிர்கொள்வதுடன் வாழ்வாதாரத்தையும் குறிப்பிட்ட அளவுக்கு கடினமாக்குகிறது.

  இதன் விளைவாக பொருளாதார நெருக்கடி, வளர்ந்து வரும் போட்டி நாடுகளை எதிர்கொள்வது, சந்தையின் தேவை ஏற்ற இறக்கங்கள் மற்றும் ஒத்திசைவு தொடர்பான சிக்கல்கள் போன்ற சுற்றுசூழல் அச்சுறுத்தல்களுக்கு நிறுவனங்கள் திறம்பட செயல்படுவதற்கும் இந்த நெகிழ்வான வேலை நேரம் சிறந்த அணுகுமுறையாக இருக்குமென்று நாங்கள் நம்புகிறோம். இந்த வேலைமுறை கர்நாடகா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இச்சூழலில் ஏற்றுமதி துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு நெகிழ்வான வேலை நேரத்தை அனுமதிக்கவும், அதன் மூலம் சிறந்த தொழில் துறை வளர்ச்சியை உருவாக்குவதற்கும் தயவு செய்து இத்திட்டத்தை பரிசீலிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

  விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து எங்கள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்துவதற்கு என்றென்றும் நாங்கள் கடமைபட்டுள்ளோம். இக்கோரிக்கையை பரிசீலிக்குமாறு மீண்டும் கேட்டு கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

  Next Story
  ×