search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் பலத்த மழை சாலையில் வேரோடு சாய்ந்த மரம் -  போக்குவரத்து பாதிப்பு
    X

     மரம் சாலையின் குறுக்கே விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    உடுமலையில் பலத்த மழை சாலையில் வேரோடு சாய்ந்த மரம் - போக்குவரத்து பாதிப்பு

    • அதிகாலை 5 மணி யளவில் உடுமலை பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது
    • பெரிய பழமை வாய்ந்த மரம் ஒன்று திடீரென சரிந்து சாலையின் குறுக்காக விழுந்தது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதை முன்னிட்டு சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து வானம் மேகம் மூட்டமாக காணப்படுவதுடன் இதமான சூழலும் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி யளவில் உடுமலை பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது.மழையின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் உடுமலை நகராட்சி 24 - வது வார்டுக்கு உட்பட்ட பாபுகான் வீதியில் உள்ள பெரிய பழமை வாய்ந்த மரம் ஒன்று திடீரென சரிந்து சாலையின் குறுக்காக விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் அந்த வீதியில் போக்குவரத்து இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி பணியாளர்கள் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை வெட்டி அகற்றினார்கள். அதைத் தொடர்ந்து அந்த வீதியில் போக்குவரத்து சீரடைந்தது. இதே போன்று கபூர்கான் வீதியில் அடிப்படை கட்டமைப்பான கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த வில்லை.இதன் காரணமாக மழைக்காலத்தில் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் சாலையின் இரண்டு புறங்களிலும் தேங்கி நிற்கிறது.இதனால் அந்த வழியாக செல்கின்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள், உழவர் சந்தைக்கு வருகை தருகின்ற வியாபாரிகள், பொதுமக்கள், ெரயில் நிலையத்துக்கு செல்கின்ற பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:- பிரதான சாலையான கபூர்கான் வீதியில் கழிவு நீர் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றோம். ஆனால் அதற்கு உண்டான முயற்சிகளை அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால் சாலையின் பாதி அளவிற்கு மழைத் தண்ணீர் ஆக்கிரமித்துக் கொள்வதால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது மிகவும் நிலை தடுமாறி வருகின்றனர். எனவே கபூர்கான் வீதியில் கழிவு நீர் கால்வாய் வசதியை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×