வரத்து குறைவால் ஆடுகள் விலை உயர்வு

தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை.கடந்த மூன்று வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

மூலனூர்

தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை. இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த வாரம் சந்தை நடந்தது. கடந்த வாரத்தில் ரூ.6500-க்கு விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ ஆடு இந்த வாரம் ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆடுகளின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து இருந்தது.

இது குறித்து ஆடு வளர்க்கும் விவசாயி ஒருவர் கூறியதாவது:-

மூலனூர் பகுதியில் ஆடுகளுக்கு போதுமான தீவனம் கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் ஆடுகளை விற்க முன்வருவதில்லை.எனவே கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு கடந்த மூன்று வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது.

இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com