search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காந்திநகர் ஏ.வி.பி. பள்ளியில் மனித உரிமை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    காந்திநகர் ஏ.வி.பி. பள்ளியில் மனித உரிமை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • ஒருவரிடமிருந்து எவ்வித உரிமையை எதிர்பார்க்கிறோமோ, அதேஉரிமையை அவருக்கு நாமும் வழங்க வேண்டும்.
    • நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக் குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி முன்னிலை வகித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியின் இன்ட்ராக்ட் மாணவர்கள் ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுனுடன் இணைந்து உலக மனித உரிமை தினநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தினர்.

    ஒருவரிடமிருந்து எவ்வித உரிமையை எதிர்பார்க்கிறோமோ, அதேஉரிமையை அவருக்கு நாமும் வழங்க வேண்டும். யாரும் யாரையும்அடிமைப்படுத்தக் கூடாது என்பதை உணர்த்தும் தெருநாடகத்தினை மாணவர்கள் பொதுமக்களிடையே நிகழ்த்தியும் , மனித உரிமைகள்தொடர்பான துண்டறிக்கைகளை வழங்கி மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக் குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி முன்னிலை வகித்தார். ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுனின் தலைவர் கதிர்வேல், செயலாளர் சந்திரன், பொருளாளர் பழனிச்சாமி, ரோட்டரி தொழிற்கல்வி பயிற்சியின் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் முதல்வர் பிரமோதினி, ஒருங்கிணைப்பாளர்கள் மோகனா, நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×