என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராகல்பாவி பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
- எண்ணும் எழுத்தும் திட்டம் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- மாணவர்களுக்கு வண்ணக் கிரையான்களும், வண்ண பென்சில்களும் வழங்கப்பட்டன.
உடுமலை :
எண்ணும் எழுத்தும் திட்டம் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிக்கொணரும் பொருட்டு வரைந்து வண்ணம் தீட்டுதலுக்காக வண்ண கிரையான்கள் மற்றும் வண்ண பென்சில்கள் வருடம் தோறும் அரசாங்கம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு வண்ணக் கிரையான்களும், வண்ண பென்சில்களும் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சாவித்திரி ,ஆசிரியர் கண்ணபிரான் கலந்து கொண்டனர்.
Next Story






