search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அருகே தளி வாய்க்கால் சுரங்கப்பாதை இடித்து அகற்றம்
    X

    தளி வாய்க்கால் சுரங்கப்பாதை இடித்து அகற்றும் பணியை படத்தில் காணலாம்.

    உடுமலை அருகே தளி வாய்க்கால் சுரங்கப்பாதை இடித்து அகற்றம்

    • பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் பெற்று வருகிறது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கட்டப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்கள் அணைகளுக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு திருமூர்த்திஅணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பிஏபி., பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் பெற்று வருகிறது. இதற்கு பி.ஏ.பி., தொகுப்பு அணைகளும் நீர்வரத்தை அளித்து உதவி புரிந்து வருகிறது.

    அதுமட்டுமின்றி உடுமலை, பூலாங்கிணர், கணக்கம்பாளையம், குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் தளி வாய்க்கால் மூலமாக ஏழுகுளம் பாசனமும் நடைபெற்று வருகிறது.பி.ஏ.பி., திட்டத்தின் உயிர்நாடியான பிரதான கால்வாய்க்கு கீழே அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை வழியாக தளி வாய்க்கால் கடந்து செல்கிறது. தளி வாய்க்கால் அருகே பி.ஏ.பி., பிரதான கால்வாயின் பக்கவாட்டு சுவரில் துளை ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வந்தது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் துளையை சீரமைக்கக் கோரி கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழலில் பி.ஏ.பி., வாய்க்கால் மற்றும் தளி சுரங்கப்பாதை சந்திக்கும் பகுதியில் கட்டுமான பணி தொடங்கி உள்ளது. அப்போது பி.ஏ.பி, கால்வாய் மற்றும் தளி வாய்க்கால் சுரங்கப்பாதை இடித்து அகற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் பணியை விரைந்து செய்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×