என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
    X

    கோப்புபடம்

    சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

    • இந்த கூட்டத்திற்கு மாநில பொருளாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்
    • பொதுக்குழு கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    பல்லடம்:

    தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொருளாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாநில பிரச்சார செயலாளர் பாஸ்கர் ஜோசப், ஊரக வளர்ச்சித் துறை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் மகேந்திரன், சாலை பணியாளர் சங்க மாநில நிர்வாகி ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பொதுக்குழு கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் மாவட்ட தலைவராக தமிழரசன், செயலாளராக தேவி, பொருளாளராக பழனிசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் ஒன்றிய தலைவராக அக்கம்மாள், செயலாளராக ராமசாமி, பொருளாளராக ஜோதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த பொதுக்குழு கூட்டத்தில் சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வூதியத்தை உயர்த்தி தர வேண்டும், பதவி உயர்வு மற்றும் அரசு மானியத்தை அதிகப்படுத்தி தரவேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விழா முடிவில் ஒன்றிய பொருளாளர் ஜோதி நன்றி கூறினார்.

    Next Story
    ×