search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் 500 கிலோ முருங்கைக்காய்கள் வரத்து
    X

    கோப்புபடம்

    வெள்ளகோவிலில் 500 கிலோ முருங்கைக்காய்கள் வரத்து

    • ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.55 முதல் 60வரைக்கும், மரம் முருங்கை ரூ.60முதல் 65வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.70 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
    • நேற்று 30 விவசாயிகள் 500 கிலோ முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்,

    நேற்று 30 விவசாயிகள் 500 கிலோ முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.55 முதல் 60வரைக்கும், மரம் முருங்கை ரூ.60முதல் 65வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.70 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்ப்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில வாரங்களாக வட மாநிலத்தில் இருந்து முருங்கைக்காய் வரத்தொடங்கிவிட்டது. வெள்ளகோவில் வட்டார பகுதிகளில் வரத்து குறைந்து விட்டதாகவும், இப்பகுதியில் மழை இல்லாமல் இருந்தால் வரும் வாரங்களில் முருங்கைக்காய் வரத்து இருக்கும் என முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது, வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    நேற்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.30, கத்தரிக்காய் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.30,சின்ன வெங்காயம் ரூ. 60, உருளைக்கிழங்கு ரூ.40, பீட்ரூட் ரூ.40, பீன்ஸ் ரூ.40, கேரட் ரூ.40, பாவற்காய் ரூ.40, பச்சை மிளகாய் ரூ.40, வெண்டைக்காய் ரூ.40, இஞ்சி ரூ.60, அவரைக்காய் ரூ.60, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.30, முள்ளங்கி ரூ. 40, சுரக்காய் ரூ. 10க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    Next Story
    ×