search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாதாந்திர கூட்டம் நடத்தக்கோரி பல்லடம் நகராட்சி ஆணையரிடம் கவுன்சிலர்கள் மனு
    X

    நகராட்சி ஆணையாளர் முத்துசாமியிடம் கவுன்சிலர்கள் மனு அளித்தக் காட்சி.

    மாதாந்திர கூட்டம் நடத்தக்கோரி பல்லடம் நகராட்சி ஆணையரிடம் கவுன்சிலர்கள் மனு

    • நகர்மன்றம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களையும் அழைக்க வேண்டும்.
    • திடக்கழிவு மேலாண்மை பணி டெண்டர் தீர்மானத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் 11 பேர் எதிர்த்துள்ளோம்.

    பல்லடம்:

    பல்லடம் நகர்மன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரமூர்த்தி (6 வது வார்டு), பாலகிருஷ்ணன்(1 வார்டு),ராஜசேகரன்(2 வார்டு), சவுந்தர்ராஜன்(4 வார்டு), ருக்மணி சேகர்(16 வார்டு),விஜயலட்சுமி பழனிச்சாமி(15 வார்டு),பாமிதா கயாஸ்(9 வார்டு), சுகன்யா ஜெகதீஷ்(8 வார்டு), ஆகியோர் நகராட்சி ஆணையாளர் முத்துசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- நகர்மன்ற மாதாந்திர கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெற வேண்டும் .ஆனால் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் பல்லடம் நகர்மன்ற கூட்டம் நடைபெறவில்லை.தொடர்ந்து 3 மாதங்களாகியும் நகர்மன்ற கூட்டம் நடைபெறாமல் உள்ளது. நகர்மன்ற கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும்.

    18 வார்டுகளிலும் நகர்மன்றம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களையும் அழைக்க வேண்டும். பல்லடத்தில் அனைத்து வார்டுகளிலும் தெருவிளக்கு மற்றும் தூய்மை பணிகள் மந்தமாக உள்ளது. குடிநீர் விநியோகம் மற்றும் பொது பிரச்சனைகளில் நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திடக்கழிவு மேலாண்மை பணி டெண்டர் தீர்மானத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் 11 பேர் எதிர்த்துள்ளோம். எனவே அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அவ்வாறு தோற்கடிக்கப்பட்ட தீர்மானத்தை, ஏன் தீர்மான நோட்டில் எழுதவில்லை. மேலும் அந்த தீர்மானம் எந்த காரணத்தினால் தோல்வியுற்றது என்று தீர்மான நோட்டில் பதிவு செய்ய வேண்டும் என்பது விதி உள்ளது.

    அதை கடைபிடிக்கவில்லை. திடக்கழிவு மேலாண்மை பணி டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மீண்டும் அந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபடலாமா, அல்லது ஏற்கனவே உள்ளவாறு நகராட்சி நிர்வாகமே பணியை மேற்கொள்ளுமா என்பது தெரியப்படுத்தவும். நகராட்சி ஆணையாளர் மற்றும் தலைவர் பயன்படுத்தும் வாகனங்கள் அதற்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்த வேண்டும்.

    அலுவலகத்தின் நுழைவு வாயிலில் நிறுத்துவதால் உடல் ஊனமுற்றோருக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக உள்ளது.நகராட்சி தலைவர் அலுவலகத்தில் இல்லாத போது தலைவரின் அறையை பூட்டி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×