என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறவைகளை கணக்கெடுக்கும் கல்லூரி மாணவர்கள் - 29 வகையான பறவைகளை கண்டறிந்தனர்
    X

    கணக்கெடுப்பு எடுத்த கல்லூரி மாணவர்கள்.

    பறவைகளை கணக்கெடுக்கும் கல்லூரி மாணவர்கள் - 29 வகையான பறவைகளை கண்டறிந்தனர்

    7 நாட்கள் சிறப்பு முகாம் கடந்த 28 ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 சார்பாக தத்தெடுத்த கிராமமான கருமாபாளையத்தில் 7 நாட்கள் சிறப்பு முகாம் கடந்த 28 ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    அதன்படி 4ம் நாளான இன்று கிராமத்தில் உள்ள பறவைகளை கணக்கீடு மற்றும் கண்டறிதல் நிகழ்வு நடைபெற்றது. அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கலந்து கொண்டார். அவரின் வழிகாட்டுதலின் படி மாணவர்கள் பறவைகளை கண்டறிய கிராமத்தின் உட்புறம் கிட்டதட்ட 2.5 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து 29 வகையான பறவைகளை கண்டறிந்தனர்.

    Next Story
    ×