search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டறைகள் மூடல் - திருப்பூரில் பாத்திர உற்பத்தி பாதிப்பு
    X

    கோப்புபடம்.

    பட்டறைகள் மூடல் - திருப்பூரில் பாத்திர உற்பத்தி பாதிப்பு

    • 200 எவர்சில்வர் பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன.
    • கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம், அங்கேரிபாளையம், 15 வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதியில் 200 எவர்சில்வர் பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன.நாள் ஒன்றுக்கு வாணா சட்டி, தகட்டு பானை, செம்பு, டேக் ஷா, இட்லி சட்டி என 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத்தி ரங்கள் உற்பத்தி செய்யப்ப டுகிறது. இவை தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளி ட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.இத்தொழிலை நம்பி 2000 தொழிலாளர்கள் உள்ளனர். சமீபத்தில் 16 சதவீதம் சம்பளத்தை உயர்த்தி புதிய சம்பள ஒப்பந்தம் நிறைவே ற்றப்பட்டது. எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சம்பள உயர்வை வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வியாபா ரிகளுக்கு தெரிவிக்கும் வகையிலும், தற்போது தொழில் மந்த நிலையில் இருப்பதாலும் நேற்று முதல் 23-ந் தேதி வரை உற்பத்தியை நிறுத்து வது என அறிவி க்கப்பட்டது.

    இதையடுத்து அனைத்து எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்களும் தங்கள் பட்டறைகளை மூடி உற்பத்தியை நிறுத்தினர். இதனால் உற்பத்தியின்றி பட்டறைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான பாத்திர உற்பத்தி பாதிக்கப்ப ட்டுள்ளது.

    Next Story
    ×