என் மலர்
உள்ளூர் செய்திகள்

22 வது வார்டு கவுன்சிலரும், முன்னாள் மண்டல தலைவருமான ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய காட்சி.
சிறப்பான சேவையை பாராட்டி 22- வது வார்டு கவுன்சிலருக்கு பாராட்டு சான்றிதழ்
- 60 லட்சம் நிதி மதிப்பீட்டில் பணியினை மேற்கொள்ள நிர்வாகம் உத்தரவிட்டு அனுமதி வழங்கியுள்ளது .
- பாராட்டு சான்றிதழை மேயர் தினேஷ்குமார் மற்றும் கமிஷனர் பவன்குமார் ஆகியோர் வழங்கினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் மேயர் தினேஷ்குமார் கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த பணியாளர்களுக்கு விருது உள்ளிட்டவற்றை வழங்கினார்.
அப்போது திருப்பூர் மாநகராட்சி 22 - வது வார்டு குமரானந்தபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிக்கு "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் சில நாட்களுக்கு முன்பு மேயரிடம் 20,07,500 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது
அதன் அடிப்படையில் மாநகராட்சி மூலமாக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இப்பொழுது 60 லட்சம் நிதி மதிப்பீட்டில் பணியினை மேற்கொள்ள நிர்வாகம் உத்தரவிட்டு அனுமதி வழங்கியுள்ளது .
அதற்காக திருப்பூர் மாநகராட்சியின் சார்பில் சிறப்பான சேவையை பாராட்டி 22 வது வார்டு கவுன்சிலரும், முன்னாள் மண்டல தலைவருமான ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு சான்றிதழை மேயர் தினேஷ்குமார் மற்றும் கமிஷனர் பவன்குமார் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் 21 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பத்மாவதி, 22 வது வட்ட கழக செயலாளர் ராஜ்குமார், வேலுசாமி, ஞானவேல், லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழை பெற்று கொண்டனர்.






