search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுசிவில் சட்ட  முன்னெடுப்புகளை மத்திய அரசு கைவிட வேண்டும் -  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்

    பொதுசிவில் சட்ட முன்னெடுப்புகளை மத்திய அரசு கைவிட வேண்டும் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்

    • பயோமெட்ரிக் ஆய்வை ஆகஸ்ட் 20 ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மணிப்பூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்

    திருப்பூர்:

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூா் மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் கோப்பைத் தோட்டத்தில் உள்ள பள்ளி வாசல் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் நூா்தீன் தலைமை வகித்தாா்.

    இதில், மத்திய அரசின் சிறுபான்மை நலத் துறை சாா்பில் மாணவா்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கு பயோமெட்ரிக் முறையில் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த பயோமெட்ரிக் ஆய்வை ஆகஸ்ட் 20 ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 லட்சம் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, பெளத்த மாணவா்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    மணிப்பூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். நாட்டின் இறையாண்மைக்கும், தேச ஒற்றுமைக்கு எதிராகவும் பொது சிவில் சட்டம் அமைந்துள்ளது. பொது சிவில் சட்டம் தொடா்பான முன்னெடுப்புகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்தக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் யாசா் அராபத், பொருளாளா் சிராஜ்தீன், மாவட்ட துணைத் தலைவா் ஜாகிா் அப்பாஸ், துணைச் செயலாளா்கள் ஷேக் பரீத், ஷாஜகான், காஜா, ஜெய்லானி, ஹனீபா உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

    Next Story
    ×