என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் நகராட்சியில் அடிப்படை பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் - அ.தி.மு.க.வினர் வலியுறுத்தல்
    X

    பல்லடம் நகராட்சி ஆணையாளர் முத்துசாமியிடம் அ.தி.மு.க நிர்வாகிகள் மனு அளித்தபோது எடுத்த படம்.

    பல்லடம் நகராட்சியில் அடிப்படை பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் - அ.தி.மு.க.வினர் வலியுறுத்தல்

    • நகரப் பகுதியில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.
    • குடிநீர்,தெரு விளக்கு,கழிவுநீர் அகற்றுதல் போன்ற அடிப்படை அத்தியாவசிய பணிகள் முறையாக செய்யப்படுவதில்லை.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் முத்துசாமியை பல்லடம் அதிமுக., நகரச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் அதிமுக., நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது பல்லடம் நகராட்சி பகுதிகளில் அடிப்படை பணிகளான குடிநீர்,தெரு விளக்கு,கழிவுநீர் அகற்றுதல் போன்ற அடிப்படை அத்தியாவசிய பணிகள் முறையாக செய்யப்படுவதில்லை எனவும், எதற்கு எடுத்தாலும், நகர்மன்ற உறுப்பினர் மற்றும் தலைவரை கேட்டுத்தான் பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

    நகரப் பகுதியில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. குடி தண்ணீர் எப்பொழுது வரும் என தெரிவதில்லை. எனவே நகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அடிப்படை அத்தியாவசிய பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.இந்தநிகழ்ச்சியில் பானு பழனிச்சாமி, தமிழ்நாடு பழனிச்சாமி, லட்சுமணன், துரைக்கண்ணன், வெங்கடேஷ்குமார்,ஜம்புமணி, ஆசிரியர் ரங்கசாமி,ரவி மற்றும் அதிமுக., நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×