என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஏ.வி.பி. பள்ளி இண்ட்ராக்ட் கிளப் சார்பில் மார்பக புற்றுநோய் இலவச பரிசோதனை முகாம்
  X

  ஏ.வி.பி. பள்ளி இண்ட்ராக்ட் கிளப் சார்பில் மார்பக புற்றுநோய் இலவச பரிசோதனை முகாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவை மெடிக்கல் சென்டர் டாக்டர் காவ்யா கலந்து கொண்டு மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் குறித்து விளக்கி பேசினார்.
  • பள்ளி முதல்வர் பிரியாராஜா உள்பட ஏராளமான பெண்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

  திருப்பூர் :

  ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுன், ஏ.வி.பி. பள்ளியின் இண்ட்ராக்ட் கிளப், கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை இணைந்து ஹீல் திட்டத்தின் கீழ் மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச பரிசோதனை முகாம் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுன் தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார்.

  செயலாளர் சந்திரன், பொருளாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவரும், ரோட்டரி மாவட்ட பயிற்றுனருமான கார்த்திகேயன், மாவட்ட பொதுச் செயலாளர் வரதராஜ், உதவி ஆளுனர் மெல்வின் பாபு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராம், ஹீல் திட்டத்தின் மண்டல செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

  இதில் எஸ்.டி. எக்ஸ்போர்ட்ஸ் பி.லிட் லீலாவதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

  முகாமில் கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை டாக்டர் காவ்யா கலந்து கொண்டு மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் குறித்து விளக்கி பேசினார். இதில் ஏ.வி.பி. அறக்கட்டளை பொருளாளர் லதா கார்த்திகேயன், பள்ளி முதல்வர் பிரியாராஜா உள்பட ஏராளமான பெண்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

  Next Story
  ×