search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இ-சேவை மையங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புபடம்.

    இ-சேவை மையங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

    • வெகுநேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.
    • அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் துவக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு மின்னணு நிறுவனம், அரசு கேபிள் டி.வி., நிறுவனம், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக இ - சேவை மையங்கள் நடத்தப்படுகி ன்றன.வருவாய்த்துறையில் மேற்கொள்ளும் அனைத்து விதமான பணிகளும் இம்மையங்களில் மேற்கொ ள்வதால் எப்போதும் மக்கள் கூட்டம் காணப்படு கிறது. வெகுநேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதற்கு தீர்வு காண படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்க ளையும் ஊக்குவிக்கும் வகையிலும், அனைத்து இணைய வழி சேவைகளும் பொதுமக்க ளின் இருப்பிட த்துக்கு அருகிலேயே கிடைக்கும் வகையிலும், அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் துவக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

    இதற்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு மின் ஆளுமை முகமை பிரத்யேகமாக வலைதளம் உருவாக்கியி ருக்கிறது.இணைய வழி மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். கம்ப்யூட்டர், பிரிண்டர், ஸ்கேனர், கைரேகை அங்கீகார சாதனம், இணைய வசதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் வைத்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.www.tnesevai.tn.gov.in அல்லது www.tnega.tn.gov.in இணைய தளம் வாயிலாக ஏப்ரல் 14-ந் தேதி இரவு 8மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.கிராமப்பகுதிகளில் துவக்குவதற்கு ரூ.3,000, நகர பகுதியில் ரூ.6,000 கட்டணம் செலுத்த வேண்டும்.

    பயனர் எண் மற்றும் கடவுச்சொல், விண்ணப்ப த்தில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என ஊரக வளர்ச்சி துறை தெரிவித்து ள்ளது. இதுதொடர்பாக கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×