என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம்
  X

  கோப்புபடம்.

  சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டிற்காக 30 முக்கிய முயற்சிகளை அறிவிப்பு.
  • சுற்றுலாத்தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கவுள்ளது.

  திருப்பூர் :

  தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையின் சார்பில் விருதுகள்வழங்கப்படவுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சுற்றுலாத்துறை அமைச்சர் 2021-22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத் தொடரில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 30 முக்கிய முயற்சிகளை அறிவித்திருந்தார். தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலாத்தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது அத்தகைய முக்கிய அறிவிப்பாகும்.

  தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலாத்தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கவுள்ளது. இந்தவிருதுகள் சுற்றுலாத்தொழில் முனைவோரையும், மாநிலத்தில் சுற்றுலா தொடர்புடைய செயல்பாடுகளைச் செயற்படுத்தும் சுற்றுலாத்தொழில் புரிவோரையும் ஊக்குவிக்கும். இந்த விருதுகள் பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படும். 15 வெவ்வேறு பிரிவுகளில் உள்ள விருதுகளின் முதல் பதிப்பு 27.9.2022 அன்று வழங்கப்படும். மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று (27.09.2022) சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்:26.8.2022 ஆகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×