என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாத்திர உற்பத்தி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பெற்றுத்தர நடவடிக்கை - சங்க கூட்டத்தில் தீர்மானம்
  X

  பாத்திர உற்பத்தி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பெற்றுத்தர நடவடிக்கை - சங்க கூட்டத்தில் தீர்மானம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செம்பு வகை பாத்திரங்களுக்கு 70 சதவீதம், எவர்சில்வர் வகைகளுக்கு 60 சதவீதமும் தொழிலாளர்களுக்கு பெற்றுத்தருவது.
  • பாத்திர தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

  அனுப்பர்பாளையம் :

  திருப்பூர்-கோவை மாவட்ட பாத்திர தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்தம் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தொழிலாளர்களின் நலன் கருதி புதிய கூலி உயர்வாக தற்போது உள்ள கூலிக்கு மேல் பித்தளை, செம்பு வகை பாத்திரங்களுக்கு 70 சதவீதம், எவர்சில்வர் வகைகளுக்கு 60 சதவீதமும் தொழிலாளர்களுக்கு பெற்றுத்தருவது.

  கூலி உயர்வு சம்பந்தமான கடிதத்தை அனைத்து பாத்திர தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி விரைவில் பாத்திர உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது, அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக தங்களை இணைத்துக்கொள்ளாத தொழிலாளர்களை சங்கத்தின் மூலம் சேர்ப்பது, ஏற்கனவே உறுப்பினராக உள்ள தொழிலாளர்களுக்கு நலவாரியத்தின் மூலம் கிடைக்கப்பெற வேண்டிய பயன்களை பெற்றுத் தருவது.

  இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவாக முடித்து, தொழிலாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  Next Story
  ×