search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு இயக்குபவர்கள்மீது நடவடிக்கை  - டிரைவர்கள் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்

    சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு இயக்குபவர்கள்மீது நடவடிக்கை - டிரைவர்கள் வலியுறுத்தல்

    • கார்ப்பரேட் கால் டாக்ஸி நிறுவனங்கள் அரசுக்கு எந்தவொரு வரியும் முறையாக கட்டுவதில்லை.
    • போக்குவரத்து துறை அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆல்ட்ராக் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் உள்பட பல சங்கங்களை சோ்ந்த டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலெக்டாிடம் மனு ஒன்றை அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூரில் தற்போது சொந்த பயன்பாட்டு வாகனத்தை பலர் வாடகை வண்டியாக பயன்படுத்தி வருகின்றனர். கார்ப்பரேட் கால் டாக்ஸி நிறுவனங்கள் அரசுக்கு எந்தவொரு வரியும் முறையாக கட்டுவதில்லை. கால் டாக்சி நிறுவனங்கள் குறைந்த கட்டணம் என்று அறிவித்துவிட்டு பயணம் முடிந்ததும் பயணம் செய்பவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அதுபோல் வாகன உாிமையாளரிடமும், டிரைவர்களிடமும் கால் டாக்சி நிறுவனங்கள் அதிக கமிஷனை பெற்றுக்கொள்கிறாா்கள்.

    இதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் எங்களுக்கும், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே மாவட்ட கலெக்டர் தகுந்த நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்விற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    Next Story
    ×