என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் - ஊர் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த அலகுமலை பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் ஊர் அருகாமையில் உள்ள அலகுமலைமுருகன் கோவில் பிரசித்தி பெற்ற ஸ்தலம். வருடா வருடம்தைப்பொங்கல் விழாவையொட்டி 4 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த வருடம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜல்லிக்கட்டு நடைபெற இடையூறு செய்து வருகின்றனர் .கடந்த 4ஆண்டுகளும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக இந்த ஜல்லிக்கட்டு விழாவை நடத்தி கொடுத்துள்ளார்கள்.
அதுபோலவேஇந்த ஆண்டும் விழாவை சிறப்பாக நடத்திக் கொடுக்க ஊர் மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.
திருப்பூர் ஏர் தழுவுதல் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் மாடு பிடி வீரர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் பாரம்பரிய விளையாட்டான வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு விழா திருப்பூரில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்றது.
இதனால் அழிவின் விளிம்பில் இருந்த காங்கேயம் இன காளைகள் தற்போது இனவிருத்தி செய்யப்பட்டு அதிகமாகி தற்போது 280க்கும் மேற்பட்ட காளைகள் திகழ்கிறது. எனவே இந்த ஆண்டும் அலகுமலையில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாடுபிடி வீரர்கள் உள்ளனர். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.






