search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டாற்றை கடந்து செல்ல பாலம் - மலைகிராம மக்கள் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    கூட்டாற்றை கடந்து செல்ல பாலம் - மலைகிராம மக்கள் வலியுறுத்தல்

    • தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 5 வது மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
    • மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை அருகே திருமூர்த்திமலையில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 5 வது மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. நாகன் சங்கத்தின் கொடியேற்றி துவக்கி வைத்தார். மலை கமிட்டி தலைவர் மணி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் மதுசூதனன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொது செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் பேசினர்.மாநாட்டில், திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட மலைவாழ் கிராமங்களில், வசிக்கும் மக்கள் அனைவருக்கும், அனுபவ நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும். குருமலை மலைவாழ் குடியிருப்புக்கு திருமூர்த்திமலையிலிருந்து பாதை அமைக்க வேண்டும்.பாதை இல்லாத அனைத்து மலைவாழ் கிராமங்களுக்கும் புதிதாக அமைத்து தர வேண்டும்.

    புலையன் இன மக்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அனைவருக்கும், கான்கிரீட் வீடுகள் கட்டித்தர மத்திய, மாநில அரசு முன்வர வேண்டும்.தளிஞ்சி மக்கள், கூட்டாற்றை கடந்து செல்ல பாலம் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.திருமூர்த்திமலை மலைவாழ் மக்கள் சங்கத்தலைவராக குப்புசாமி, செயலாளராக செல்வன், பொருளாளராக மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகி வாணீஸ்வரி நன்றி கூறினார்.

    Next Story
    ×