என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம் நகராட்சி பகுதியில் குப்பைகள் சேகரிக்க  ரூ.51 லட்சத்தில் 7 வாகனங்கள்
    X

    நகராட்சி சார்பில் வாங்கப்பட்டுள்ள புதிய வாகனங்கள்.

    காங்கயம் நகராட்சி பகுதியில் குப்பைகள் சேகரிக்க ரூ.51 லட்சத்தில் 7 வாகனங்கள்

    • ரூ.51.10 லட்சத்தில் 7 புதிய இலகு ரக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.
    • தினசரி சுமார் 13 டன் குப்பைகளை சேகரம் செய்து வருகிறது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்திட்டம் 2022-2023-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.51.10 லட்சத்தில் 7 புதிய இலகு ரக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. காங்கயம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த 18 வார்டுகளில் இருந்து காங்கயம் நகராட்சிக்கு கழிவுகளை சேகரிக்கும் வாகனங்கள் குடியிருப்பு பகுதிகளில் சென்று தினசரி சுமார் 13 டன் குப்பைகளை சேகரம் செய்து வருகிறது. 4 இலகு ரக வாகனங்கள் ஏற்கனவே குப்பைகளை சேகரிக்க பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் நகராட்சியின் தேவைக்காக மேலும் 7 வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு பயன்பாட்டிற்கு வந்தது.

    இதனை காங்கயம் நகர் மன்ற தலைவர் சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையர் கனிராஜ், சுகாதார ஆய்வாளர் சரவணன், பொறியாளர் குணசீலன் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    Next Story
    ×