என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மாநில வாலிபால்  அணிக்கு திருப்பூரில் இருந்து 6 பேர் தேர்வு
    X

    கோப்புபடம்

    மாநில வாலிபால் அணிக்கு திருப்பூரில் இருந்து 6 பேர் தேர்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநில வாலிபால் தேர்வு அணிக்கான போட்டிகள் திருப்பூர் நஞ்சப்பா ஜெய்வாபாய் பள்ளி மைதானத்தில் நடந்தது.
    • திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் தேர்வாகினர்.

    திருப்பூர் :

    இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில் மாநில வாலிபால் தேர்வு அணிக்கான போட்டிகள் திருப்பூர் நஞ்சப்பா ஜெய்வாபாய் பள்ளி மைதானத்தில் நடந்தது.ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து மாணவர் பிரிவில் 330 பேரும், மாணவிகள் பிரிவில் 168 பேரும் பங்கேற்றனர்.

    மாணவர் பிரிவில் 14, 17, 19 வயது பிரிவில் தலா 7 பேர் வீதம் 21 வீரர்களும், மாணவிகள் பிரிவில் தலா 7 பேர் வீதம் 21 வீராங்கனைகள் என 42 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் தேர்வாகினர்.

    மாணவர் 14 வயதில் திருப்பூரை சேர்ந்த திவாகர், தனுர்சஞ்சீவி, யஸ்வந்த், நவீன், கோவை பிரகதம், பிரகுணா, ஈரோடு ஸ்ரீகலையரசு, 17 வயது பிரிவில் திருப்பூர் - ஸ்ரீ விஷ்ணு, ஈரோடு - சிவனேஷ், நிஷாந்த், பரத்குமார், கோவை - சின்னண்ணன், தரனேஷ், பிராஜித். 19 வயது பிரிவில் கஜேந்திரன், சஞ்சய், லிட்டில்ராஜ், விஷால்ஜேபா, சுயம்பு சஞ்சய், தனுதரன் (கோவை), திருப்பூர் - இசைவாணன்.மாணவிகள் 14 வயது பிரிவில் சாருநேத்ரா, ேஹமா ஸ்ரீ (திருப்பூர்), ராகஸ்ரீ, காசினி, ரிதன்யா, அங்கையற்கண்ணி (ஈரோடு), அனுஸ்ரீ (கோவை).

    17 வயது பிரிவில் மதுமிதா, ரஞ்சிதா, தேசிகா, ஐஸ்வர்யா, யாழினி, கனிஷ்கா (ஈரோடு), பிரீத்தி (கோவை), 19 வயது பிரிவில் கோவை சரோஜினி, ஈரோடு ஸ்வேதா, அபி, அமிர்தா, கனிகா ஸ்ரீ, தான்யா, துளசி.

    Next Story
    ×