திருப்பத்தூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை

தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் கலெக்டர் சிவசவுந்திரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக 14-ந் தேதி அன்று ஒரு நாள் முழுவதும் திருப்பத்தூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com