என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயில்வே குடியிருப்பில் திருடிய வாலிபர் கைது
- பூட்டை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையில் உள்ள பழைய ரெயில்வே குடி யிருப்பில் வசித்து வருபவர் பிரேந்திர குமார் (வயது27). இவர் நேற்று வீட் டில் இருந்தபோது அருகில் பூட்டப்பட்டிருந்த ரெயில்வே குடியிருப்பின் பூட்டை உடைத்து வாலிபர் ஒருவர் வீட்டின் உள்ளே சென்று பொருட்களை திருடி கொண்டிருந்தார்.
இதை அறிந்த பிரேந்திரகு மார் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரி வித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற் கொண்டனர்.
விசாரணையில் அவர் ஏல கிரி கிராமம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த இளம்பருதி (40) என்பது தெரிய வந்தது.
மேலும் இதுகுறித்து பிரேந்திரகுமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கப்பதிந்து இளம்பருதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.