என் மலர்
உள்ளூர் செய்திகள்

8 பவுன் நகை, பணம் திருடிய வாலிபர் கைது
- வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்
- ஜெயிலில் அடைத்தனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 40), விவசாயி. இவர் கடந்த 17-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு, நிலத்தில் வேலை செய்ய சென்றார்.
மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. இதில் மர்ம நபர்கள் யாரோ வீடு புகுந்து 8 பவுன் நகை, பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து பன்னீர்செல்வம் ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற, பன்னீர்செல்வம் பக்கத்து வீட்டை சேர்ந்த சந்துரு என்பவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
Next Story






