என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து ஏற்படும் பகுதியில் விழிப்புணர்வு பதாகைகள்
    X

    விபத்து ஏற்படும் பகுதியில் விழிப்புணர்வு பதாகைகள்

    • தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் வைத்தனர்
    • காரணங்கள் என்ன என போலீசாரிடம் விவரங்களை கேட்டறிந்தார்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ் ணன் உத்தரவின் பேரில் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன் பேரில், கடந்த சில நாட்களாக மாவட்ட எல்லையான வெலக்கல்நத்தம், நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர் வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், விபத்து நடக்கும் பகுதிகளில் போலீசாருடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    விபத்துக்கான காரணங்கள் என்ன எனவும் போலீசாரிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

    அதன் பிறகு நேற்று சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் எதிர் திசையில் வாகன ங்களை ஓட்டி வருவதால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதை குறைக்கும் விதமாக வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, நெக்குந்தி ஊராட்சி மன்ற தலைவர் சந்தியா மூர்த்தி ஆகியோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைத்தனர்.

    இதேபோல் விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளில் முன்னெச் சரிக்கையாக விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×