என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மலைவாழ் மக்களுக்கு பயிற்சி முகாம்
- ஏலகிரிமலையில் நடந்தது
- இயற்கை வேளாண்மை பற்றிய ஆலோசனைகளை வழங்கினர்
ஜோலார்பேட்டை
ஏலகிரிமலையில் 14 சிறிய கிராமங்கள் உள்ளன. ஏலகிரிமலை நி யில் உள்ள அண்ணா கலையரங்கில் பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மலைவாழ் டி மக்களுக்கு ஒரு நாள் திறன் பயிற்சி மற்றும் இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது.
விழாவுக்கு திருப்பத்தூர் தோட்டக்கலை துணை இயக்கு னர் பாத்திமா தலைமை தாங்கினார். தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன மண்ணியல் துறை அதிகாரி கலைவா - ணன், மண் வளத்தை மேம்படுத்துதல், இயற்கை வேளாண்மை பற்றிய ஆலோசனைகளை வழங்கினார்.
காய்கறி சாகுபடி தொழில்நுட்பத்துறை அதிகாரி சங்கர், காய்கறி பயிர்கள் சாகுபடி, புதிய காய்கறி ரகங்கள் பற்றி விளக்கினார். பழப்பயிர்கள் தொழில்நுட்பத்துறை அதிகாரி செந்தில்குமார், பழப்பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள் பற்றி விளக்கினார்.
இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புதிய காய்கறி விதைகள், பழ மரக்கன்றுகள், காய்கறி, வாழைப்பயிர்களுக்கு நுண்ணூட்ட சத்து உரங்கள் பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் முன்னிலையில் வழங் கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குனர் கோ.புவனேஸ்வரி, திருப்பத்தூர் வட்டாரத்தோட் டக்கலை உதவி இயக்குனர் அ. கயல்விழி, ஆலங்காயம் தோட் டக்கலை உதவி இயக்குனர் க.பிரசாத், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தமிழரசன், நந்தகுமரன், தணிகைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.