என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
- தண்டவாளத்தில் மயங்கி கிடந்தார்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
காட்பாடி விரிஞ்சிபுரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே வடுகன்பட்டி என்ற இடத்தில் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ஒரு ரெயிலில் பயணம் செய்த வாலிபர் ஓடும் ரெயிலில் தவறி விழந்த அடிபட்டு மயங்கி கிடந்தார்.
அவரை அங்கிருந்து பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Next Story






