என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளை அகற்ற வேண்டும்
  X

  திருப்பத்தூர் நகர பா.ஜ.க. சார்பில் செயற்குழு கூட்டம் நடந்த காட்சி.

  திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளை அகற்ற வேண்டும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பா.ஜ.க. நகர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
  • பா.ஜ.க. நகர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

  திருப்பத்தூர்:

  நகர பா.ஜ.க. செயற்குழு கூட்டம் திருப்பத்தூர் ெரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள அரிமா சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் ஆர்.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் வி அன்பழகன் முன்னிலை வகித்தார். அனைவரையும் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே. ஜி.மூர்த்தி வரவேற்றார்.

  சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் வெங்கடேசன், மாவட்டத் தலைவர் வாசுதேவன், கலந்து கொண்டனர்.

  நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் கண்ணன், கவியரசு, ஈஸ்வர் நகர பொதுச்செயலாளர் டிவி. பார்த்திபன், உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

  திருப்பத்தூர் நகரம் முழுவதும் குப்பை சரியாக வாருவதில்லை. தினமும் குப்பையை எடுத்த செல்ல வருவதில்லை. நியமிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் வந்து சரி வர குப்பையை சேகரிப்பதில்லை கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்வதில்லை.

  இவை உடனடியாக சரி செய்ய வேண்டும். வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை வரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

  இதனால் திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி மெயின் ரோடு தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை, நகராட்சி, தீயணைப்பு நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகத்திற்குச் செல்ல முடியாமல் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளதால் பஸ் நிலையம் அல்லது புதுப்பேட்டை ரோடு வழியாக சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. தாலுகா அலுவலகம் உள்ளிட்ட நான்கு இடங்களில் இரும்பு கம்பிகளை அகற்றி வழி ஏற்படுத்தி தர வேண்டும்,

  திருப்பத்தூர் நகராட்சி சார்பில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை.

  நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விரைவில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் பொருளாளர் பாலாஜி நன்றி கூறினார்.

  Next Story
  ×