என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி ஆட்சி நன்றாக இருந்ததாக தி.மு.க.வினரே பேசுகிறார்கள்
    X

    எடப்பாடி பழனிசாமி ஆட்சி நன்றாக இருந்ததாக தி.மு.க.வினரே பேசுகிறார்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் அதிமுக ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வாணியம்பாடி எம்.எல். ஏ செந்தில்குமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முனிசாமி வரவேற்று பேசினார்.

    இதில் முன்னாள் எம்.எல். ஏக்கள் கோவி.சம்பத்குமார்,கே.ஜி ரமேஷ்,மாவட்ட துணை செயலாளர் ஏ.ஆர் ராஜேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி,அதிமுக செய்தி தொடர்பாளர் சமரசம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி பேசியதாவது:-

    பேரறிஞர் அண்ணா கைவிட்ட சனாதனம் என்ற பெயரை அண்ணா பேரில் கட்சி நடத்தும் தி.மு.க.வினர் மீண்டும் அந்தக் கருத்தை கையில் எடுத்துள்ளார்கள்.

    அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 கோடியே 20 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை கொடுப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு மீதி உள்ளவர்களுக்கு என்ன? பதில் சொல்ல போகிறார்கள்,

    தமிழக அரசின் கடனை படி படியாக குறைப்பதாக கூறிவிட்டு வேலூர் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு கடன் மேல் கடன் வாங்குவதாக கூறுகிறார். 2011 -ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற போது ரூ.2.75 லட்சம் கோடி தி.மு.க. கடனில் விட்டு சென்றார்கள். டீ கடைகளில் தற்போது நடைப்பெற்று வரும் திமுக அரசு பற்றி திமுகவினரே விமர்சனம் செய்கிறார்கள்.

    எடப்பாடி பழனிச்சாமி நடத்திய ஆட்சி நன்றாக உள்ளது என்று திமுகவினர் பேசுகின்றனர். திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் அது நீடித்ததாக வரலாறு இல்லை.

    ஊழல் செய்ததாக நீதிமன்றம், சி.பிஐ என அனைவரும் செந்தில் பாலாஜியை குற்றவாளி என்று கூறி சிறையில் அடைத்தனர். செந்தில் பாலாஜிக்கு இலாகா இல்லாத அமைச்சர் என்ற பதவியை கொடுத்துள்ளார்கள்.

    அவரை அமைச்சர் பதவியில் இருந்து எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியும் செவி சாய்க்கவில்லை.

    ஆட்சியே போனாலும் சனாதனத்தை கையில் எடுப்போம் என்று கூறும் திமுகவை மக்கள் மனதில் இருந்து விடுவித்து நீண்ட நாள் ஆகிவிட்டது.

    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கு தேர்தல் வரும் நிலைக்கான சூழல் நிலை உருவாகி கொண்டுள்ளது.

    மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்கூட்டம் தொடங்கியது முதல் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கைகளில் குடைகளை பிடித்தவாறு பேச்சை கேட்டனர்.இந்த பொது கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் மகேந்திரன்,மாவட்ட மகளிரணி செயலாளர் மஞ்சுளாகந்தன்,நகர செயலாளர் சதாசிவம்,பேரூராட்சி செயலாளர்கள் சரவணன்(உதயேந்திரம்) சிவகுமார்(ஆலங்காயம்) ஆலங்காயம் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பாரதிதாசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்ச்சி முடிவில் உதயேந்திரம் பேரூராட்சி செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×