என் மலர்
உள்ளூர் செய்திகள்

அண்ணனை வெட்டி கொன்ற தம்பி
- நிலத்தகராறால் விபரீதம்
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
கந்திலி அடுத்த நரியனேரி கொண்டநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சேர்ந்த ராஜா (60) இவருக்கு இரண்டு மனைவி உள்ளனர். முதல் மனைவி மங்கைக்கு நந்தினி (32) யுவராஜ் (30) கார்த்திக் (24) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இரண்டாவது மனைவி வளர்மதி இவருக்கு அனிதா (27) அகிலா (24) அஜித் (24) என 3 பிள்ளைகள் உள்ளனர்.
ராஜாவின் 2-வது மனைவி மகளான அனிதாவை நரசிம்மன் ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.ராஜா தனக்கு சொந்தமான சொத்தை விற்று விட்டதாக தெரிகிறது. அதனை பெரியசாமி என்ற நபரிடமிருந்து நரசிம்மன் வாங்கி உள்ளார்.
இதனால் ராஜா தனது சொத்தை மருமகனே வாங்கி விட்டாரே என்று ஆத்திரத்தில் பலமுறை நரசிம்மன் மற்றும் அவரது மகளான அனிதாவிடம் பலமுறை எனது பெயரில் எழுதி வைக்கக் கோரி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து நரசிம்மன் குடும்பத்தை முழுவதுமாக ஒழித்துக் கட்ட முடிவு செய்த ராஜா முதல் மனைவியின் மகன்களான யுவராஜ் மற்றும் கார்த்திக் ஆகிய 3, பேர் சேர்ந்து நரசிம்மன் வீட்டில் ஜலடின்குச்சிகளை சமையலறையின் மேல்வைத்து கட்டிவிட்டு 500 மீட்டர் தொலைவில் உள்ள மின்கம்பத்தில் ஒயர் மூலம் கனெக்ஷன் கொடுத்து நள்ளிரவு வீடு முழுவதும் தரைமட்டமாக்கி குடும்பத்தோடு கொலை செய்ய கடந்த ஆகஸ்ட் மாதம் 2021 மண் வருடம் தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.
மழை காரணமாக ஜெலட்டின் குச்சிகள் வெடிக்காததால் அவரது வீட்டிற்கு மேலே யாரோ குதித்து ஓடும் சப்தம் கேட்டு எழுந்த சேட்டு வீட்டை பார்த்தபோது ஒயர்கள் ஜெலட்டின் குச்சிகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜா மற்றும் அவருடைய மகன் கார்த்திக் யுவராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதன் காரணமாக நிலத்தகராறில் முன் விரோதம் இருந்து வந்ததாலும் ஜெலட்டின் குச்சிகளை வைத்து நரசிம்மன் குடும்பத்தை தீர்த்து கட்ட நினைத்த யுவராஜை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என இரண்டாவது மனைவி மகன் அஜித் முடிவெடுத்தார். இந்த நிலையில் நேற்று மாரியம்மன் கோவில் திருவிழா காரணமாக நாட்டியாலயா நிகழ்ச்சி நடைபெற்றது அதன் காரணமாக யுவராஜ் சென்னையில் இருந்து நேற்று ஊர்க்கு திரும்பி உள்ளார்.
யுவராஜ் நாட்டியாலயா நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் இருந்த அஜித் தனது அண்ணன் யுவராஜை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கந்திலி போலீசார் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் தப்பி ஓடிய அஜித்தை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.மாமன் குடும்பத்தை ஜெலட்டின் குச்சி வைத்து தீர்த்தக்கட்ட நினைத்ததால் இரண்டாவது மனைவியின் மகன் அண்ணனை யுவராஜ் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரப்பரவை ஏற்படுத்தி உள்ளது.






