என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
    X

    மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த குடியானகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (வயது 29) இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலை செய்து விட்டு தனது சொந்த ஊருக்கு திரும்பினார். சிறிது நாட்கள் சொந்த ஊரிலேயே சுற்றி வந்துள்ளார். இதனால் வேலைக்கு போகவில்லை.

    இந்நிலையில் கடந்த 29-ந் தேதி தனது தாயார் நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் இவரது தாயார் ஜெயபிரகாசை ஏன் வேலைக்கு செல்லவில்லை என கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் காணப்பட்டார். பின்னர் ஜெயபிரகாஷ் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி அதில் விஷம் கலந்து குடித்து சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையம் அருகே மயங்கி நிலையில் கிடந்தார்.

    அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துமனையில் சேர்த்தனர். ஜெயபிரகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சகோதரர் சந்தோஷ் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுசம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×