என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு கலைக் கல்லூரி அமைக்க இடம்தேர்வு
- விரைவில் கல்லூரி அமைக்கும் பணி தொடங்கும்
- அதிகாரிகள் தகவல்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நாட்டறம்பள்ளி பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைப்ப தற்காக இடங்களை தேர்வு செய்ய உத்தரவிட்டார்.
அதன் பேரில் நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தாரப்பள்ளி பகுதியில் சர்வோதய சங்கத்தின் கட்டுப்பட்டில் உள்ள 15 ஏக்கர் இடத்தில் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவ லர் சந்தீப் மற்றும் வருவாய்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணியை தொடங்கினர்.
அந்த இடத் தில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அரசு நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டு விரைவில் அரசு கலைக் கல்லூரி அமைக்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






