என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு
  X

  வாணியம்பாடி பகுதியில் எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ஆய்வு செய்த காட்சி.

  தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முக்கிய வீதிகளில் போலீசார் விழிப்புணர்வு
  • பட்டாசு விற்பனை குறித்து சோதனை செய்யப்பட்டது

  வாணியம்பாடி:

  வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 நகராட்சிகளும், உதயேந்திரம், நாட்டறம்பள்ளி, ஆலங்காயம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் கிராம பகுதிகள் உள்ளன.

  இந்த பகுதிகளிலும், நகரப் பகுதியிலும் அங்கீகரிக்கப்பட்ட பட்டாசு கடைகள் விற்பனைகள் குறித்தும், நகர பகுதியில் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு செய்தார்.

  நேற்று காலை வாணியம்பாடி சி.எல். ரோட்டில் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில், துணை போலீஸ் சுரேஷ் பாண்டியன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  பின்னர் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் அறிவுரைகளை வழங்கினார்.

  Next Story
  ×