search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூர் மாவட்டத்தில் மாடு விடும் விழாவுக்கு தடை நீக்கம்
    X

    கசிநாயக்கன்பட்டி கிராமத்தில் மாடு விடும் திருவிழா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த காட்சி.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் மாடு விடும் விழாவுக்கு தடை நீக்கம்

    • கசிநாயக்கன்பட்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
    • காளைகள் பரிசோதனை செய்யப்பட்டு ஓட அனுமதிக்கப்பட்டது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே கல்நார்சம் பட்டி மாடு விடும் திருவிழாவில் மாடு முட்டி வாலிபர் இறந்தார்.

    இதனால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டு போலீசார் மீது கல்வீசினர் மற்றும் போலீஸ் வாகனங்கள் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் மாடு விடும் திருவிழாக்கள் நடத்த தடை செய்யப்பட்டது. பிறகு எருது விடும் திருவிழா குழுவினருடன் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் மாடு விடும் திருவிழாவின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கி கூறினர்.

    பின்னர் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு மாடு விடும் திருவிழா நடத்த தடை நீக்கப்பட்டது.

    திருப்பத்தூர் அருகே உள்ள கசிநாயக்கன்பட்டி கிராமத்தில் மாடு விடும் திருவிழா இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட வருவாய்துறை சார்பில் கோட்டாட்சியர் லட்சுமி முன்னிலையில் மாடு விடும் திருவிழா நடைபெற்றது. 200 காளைகள் பங்கேற்றன.

    கால்நடை துறை சார்பில் காளைகள் பரிசோதனை செய்யப்பட்டு ஓட அனுமதிக்கப்பட்டது.

    வாடி வாசலில் இருந்து விடப்பட்ட காளைகள் மிக வேகமாக ஓடி வந்தது. இளைஞர்கள், பொதுமக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×