என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அரசு பள்ளி மாணவர் சாதனை
- ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது
- மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடந்தது
ஜோலார்பேட்டை:
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்ட அளவில் பள்ளிகளில் பயிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றிய பேச்சு போட்டிகள் தனித்தனியே நடந்தது.
இதில் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவன் வேல்முருகன் காந்தி, நேரு பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.
இவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவனை பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். ரவி உதவி தலைமை ஆசிரியை எஸ். அருள்செல்வி, முதுகலை ஆசிரியை ஆர். சாய்ரா பானு, முதுகலை ஆசிரியர் ஸ்ரீ மாதேஷ், உடற்கல்வி ஆசிரியர் எம். மதன்குமார், தமிழ் ஆசிரியர் சி. மாதேஷ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story






