என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ம.க. மாவட்ட தலைவர், நகர ஒன்றிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
    X

    பா.ம.க. மாவட்ட தலைவர், நகர ஒன்றிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

    • புதிய மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தனர்
    • ஏராளமான கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி புதிய அலுவலகம் திறப்பு மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட தலைவர் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் திருப்பத்தூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட பா.ம.க. அலுவலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அனேரி ஏ பி சிவா, தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜி. திருப்பதி வரவேற்றார், புதிய மாவட்ட அலுவலகத்தை முன்னாள் எம்.எல்.ஏ. மாநில செயற்குழு உறுப்பினர் டி கே ராஜா, ஜி பொன்னுசாமி திறந்து வைத்து புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட தலைவர் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினார்கள்.

    மாநில மகளிர் அணி செயலாளர் நிர்மலா ராஜா முன்னாள் எம்எல்ஏ நடராஜன் மாநில செயற்குழு உறுப்பினர் இரா.கிருபாகரன் மணி என்கின்ற குட்டி மண, மாவட்ட பொருளாளர் கவிதா கோவிந்தன், கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    இறுதியில் நகர செயலாளர் டி.கே முத்தமிழ் நன்றி கூறினார் நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகிகள் நகர ஒன்றிய தலைவர் செயலாளர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    Next Story
    ×