என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெளி மாநில மது கடத்திய பெண் கைது
- ரூ.1 லட்சம் மதிப்பிலான பாட்டில்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
திருப்பத்துார்:
திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அருகே வெளி மாநில மது செய்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில், கந்திலி போலீசார் நேற்று முன்தினம் கந்திலி மற்றும்சுற்றுவட்டா ரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பெரியகரம் அருகே அன்னை சத்யா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பெண் ஒருவர் வெளி மாநில மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். முன்னதாக அவரிடம் இருந்து வெளி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story