search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜோலார்பேட்டை அருகே புதிய ரேசன் கடை
    X

    ஜோலார்பேட்டை அருகே புதிய ரேஷன் கடை எம்எல்ஏ திறந்து வைத்த போது எடுத்த படம்

    ஜோலார்பேட்டை அருகே புதிய ரேசன் கடை

    • தேவராஜி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • 50 ஆண்டு கால கோரிக்கை ஏற்பு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மோட்டூர் கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை மற்றும் பால் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி மன்ற தலைவர் ஜி. ஜி. ஆனந்தன் வரவேற்றார். ஆம்பூர் எம்எல்ஏ ஏ.சி. வில்வநாதன், மாவட்ட கவுன்சிலரும், கிழக்கு ஒன்றிய செயலாளர் சி. கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே. சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் ஜெ.சிந்துஜா ஜெகன், மத்திய ஒன்றிய செயலாளர் உமா கன்ரங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மேற்கு மாவட்ட செயலாளர் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சின்ன மோட்டூர் ஊராட்சிக்குட்பட்ட 3புளியமரத்து வட்டம் பகுதியில் 50 ஆண்டு காலமாக கோரிக்கையை ஏற்று ரேசன் கடையை 250 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் நேற்று திறந்து வைத்தார்.

    மேலும் இதே பகுதியில் விவசாய தொழில் செய்து வரும் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்க வை மாடுகள் வளர்த்து வருகின்றனர். இதனால் பால் உற்பத்தி செய்து நீண்ட தூரம் சென்று பால் ஊற்றி வருகின்றனர்.

    இதனால் பால் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் பால் கொள்முதல் நிலையத்தையும் நேற்று தேவராஜி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் சி. சத்தியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ஆ.சம்பத்குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர் சிவப்பிரகாசம், விற்பனையாளர் சேகர் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×