என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய விளையாட்டு தின போட்டிகள்
- இன்று நடக்கிறது
- பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொள்ள கலெக்டர் வலியுறுத்தல்
திருப்பத்தூர்:
தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம், திருப்பத்தூர் மாவட்ட விளையாட்டு பிரிவில், தேசிய விளையாட்டு தினத்தினை சிறப்பாக கொண்டாடிடும் பொருட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் 19 வயதிற்குட்பட்டவர்கள், 25 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்குட்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக ஆண்கள் மற்றும் மகளிருக்கு தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டரங்கில் நடத்தப்பட உள்ளது.
19 மற்றும் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் மகளிருக்கு வாலிபால் மற்றும் 100 மீட்டர் ஓட்டம், 45 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 100 மீட்டர் ஓட்டம், மகளிருக்கு 50 மீட்டர் ஓட்டம் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அதிக அளவில் கலந்து கொண்டு தேசிய விளையாட்டு தினத்தை சிறப்பிக்குமாறு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.






