என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய ஊட்டச்சத்து மாதவிழா
- அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது
- ரத்தசோகை பின்விளைவு குறித்து விளக்கப்பட்டது
வாணியம்பாடி:
ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மிட்டூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து மாதவிழா நடை பெற்றது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலு வலர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் ` ச.பசுபதி கலந்து கொண்டு தனிநபர் சுத்தம் பற்றியும் , ஊட்டச்சத்து மற்றும் ரத்தசோகை இவற்றின் பின்விளைவுகளை பற்றியும் மாணவிகளுக்கு எளிமையான முறையில் விளக்கி கூறினார்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ரகுபதி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவ லர்கள் , சுகாதார அலுவலர்கள் , ஆசிரியர்கள் , மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story






