என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
- ஆண்டு வருமானம் ரூ.1,20,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்
- கலெக்டர் அமர்குஷ்வாஹா தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன் , கல் விக்கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இதில் திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ .1,20,000- க்கு மிகாமலும் , கிராமப்புற மாயின் ரூ.98,00-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2 - ன் கீழ் பயன்பெற குடும்ப வருமானம் ரூ .8 லட்சத்துக்கு மிகாமல்இருக்க வேண்டும் . திட்டம் 1 - ன் கீழ் தனிநபருக்கு ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ .20 லட்சமும் , திட்டம் 2 - ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம் , பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகி தத்திலும் அதிகபட்சமாக ரூ .30 லட்சம் வரை கடன் வழங் கப்படுகிறது . கைவினை கலைஞர்களில் ஆண்களுக்கு 5 சத வீதம் , பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச மாக ரூ .10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது .
சுய உதவிக்குழுக் கடன் தனி நபர்ஒருவருக்கு ரூ .1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படு கிறது . மேலும் சிறுபான்மை மாணவ , மாணவிகள் அரசால் அங் கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை , முதுகலை தொழிற்கல்வி , தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு திட்டம் 1 - ன் கீழ் ரூ .20 லட்சம்- வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும் , திட்டம் 2 - ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம் , மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ . 30 லட்சம் வரை கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.
எனவே மாவட் த்தில் வசிக்கும் கிறித்துவ , இஸ்லாமிய , சீக்கிய , புத்த , பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண் ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவ ணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார் கள் . இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார் .






