search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மர்ம விலங்கை கண்டுபிடிக்க வனப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் ஆய்வு
    X

    மர்ம விலங்கு கடித்து இறந்து கிடக்கும் ஆடுகள்.

    மர்ம விலங்கை கண்டுபிடிக்க வனப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் ஆய்வு

    • 3 ஆடுகளை கடித்து கொன்றது
    • 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தொடர்ந்து 3 நாட்கள் முகாமிட்டுள்ளனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், கந் திலி யூனியன் சிம்மணபுதூர் பஞ். பழனி வட்டத்தை சேர்ந்தவர் கோவிந் தராஜ். விவசாயி.

    இவர் நிலத்தின் அருகே கொட்டகை அமைத்து கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை தனது விவசாய நிலத்தில் 3 ஆடுகளை மேய்க்க விட்டு விட்டு வீட்டிற்கு சென்றார்.

    சிறிது நேரம் கழித்து நிலத்துக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த 3 ஆடுகளையும் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக வனப்பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் மர்ம விலங்கு ஒன்று ஆடுகளை வேட்டையாடிகிறது. தற்போது பகல் நேரங்களிலேயே உலா வர தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆடுகளைக் கடித்தது வெறிநாய், செந்நாய், சிறுத்தையா என்பது தெரியவில்லை.

    இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் அச்சத்தில் முடங்கியுள்ளனர்.

    ஆடுகளை வேட்டையாடும் வனவிலங்குகளை கண்டறிந்து, பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து திருப்பத்தூர் வனத் துறையினரிடம் கேட்டதற்கு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆடுகள் இறந்த பகுதியில் ஆய்வு செய்த போது அதில் நாய்களின் கால் தடம் மட்டுமே பதிவாகியுள்ளது. இருப்பினும் ஆடுகளை வேட்டை யாடுவது எந்த விலங்கு என கண் டறிய வனசரக அலுவலர் பிரபு தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தொடர்ந்து 3 நாட்கள் முகாமிட்டுள்ளனர்.

    மேலும், இரவு நேரங்களில் துல்லியமாக பதிவு செய்யும் அதி நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் மர்ம விலங்கு நடமாட்டத்தை கண்காணிக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×