search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு தோறும் ஏற்றுவதற்காக பொதுமக்களுக்கு தேசிய கொடிகள் விநியோகம்
    X

    வீடு தோறும் ஏற்றுவதற்காக பொதுமக்களுக்கு தேசிய கொடிகள் விநியோகம்

    • 75-வது சுதந்தர தினவிழா
    • கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற அலுவலக வளாகத்தில், வீடுகள் தோறும் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றுவதற்காக தேசிய கொடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை அமுத பெரு விழாவாக கொண்டாடும் விதமாக, வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றி தேசப்பற்றை ஏற்படுத்த தேசிய கொடிகளை பொதுமக்களுக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. இலவசமாக வழங்கினார்.

    பின்னர் கணவாய்புதூர் கிராமத்தில் பொது மக்களுக்கு தேசியக் கொடிகளை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    அப்போது வருகிற ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய நாட்களில் அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், பஸ்கள், கல்வி நிறுவனங்கள், போலீஸ் நிலையங்களிலும் அரசின் வழிகாட்டுதல் படி கொடியேற்ற அனைவரும் முன்வர வேண்டும் என மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் நகர அ.தி.மு.க. செயலாளர் சதாசிவம், உதேயந்திரம் பேரூராட்சி செயலாளர் சரவணன், வாணியம்பாடி நகராட்சி நகர மன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜகீர் அகமது, நியூடவுன் சங்கர், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, ராமசாமி, சிவானந்தம், செல்வராஜ், பொருளாளர் தன்ராஜ், கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் தென்னரசு, ஜாப்ராபாத் ஊராட்சி கவுன்சிலர் ஜபியுல்லா மற்றும் அ.தி.மு.க. நகர, பேரூராட்சி, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×